இன்னும் எட்டு மணி நேரத்தில் சென்னைப்பதிவர் பட்டறை. பரீட்சைக்கு முந்தின நாள் போன்றதொரு உணர்வு .. கொஞ்சம் excitement நிறைய Tension
.
150 பேர் எதிர்பார்த்த இடத்தில் 300 பேர் இதுவரை பதிவு மட்டும் செய்துள்ளனர். அதுவும் நேற்றைய ஹிந்து கவரேஜுக்கு பின்னர் இரண்டு நாட்களில் 200க்கும் அதிகமான போன்கால்கள். வலைப்பதிவர் பட்டறையின் அதிகாரப்பூர்வ spokesperson ஆகிவிட்டேன். (போன் நம்பரை வெளியிட்ட நிருபர் வாழ்க
). கோயம்புத்தூர் ஹிந்து பதிப்பில் இன்றைக்கு வெளியான செய்தியை பார்த்துவிட்டு கோயம்பத்தூரிலிருந்து கிளம்பி வந்தால் இடம் கிடைக்குமா என்று வந்த கேள்வியில் உண்மையிலே ஆச்சரியப்பட்டு போனேன். இந்த முயற்சி கூட தாமதமானதோ என எண்ண வைத்தது போன் செய்த நண்பர்களின் ஆர்வம்.
பதிவர்களை விட பதிவுலகை பற்றி தெரியாத ஆனால் தெரிந்துகொள்ள, நுழைய விரும்புகிறவர்கள்தான் அதிகமாய் வரவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 110 கல்லூரி மாணவர்கள் வர விருப்பம் தெரிவித்திருப்பதுதான் நிகழ்வின் நோக்கத்தை ஓரளவுக்காவது நெருங்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கையை தருகிறது.
புதிதாய் வலைப்பதிவுலகிற்கு வருபவர்களுக்கு சரியான பாதையை காட்டிவிட்டோமென்றாலே பாதி பிரச்சனை சரியாகிவிடும் என்பது என் எண்ணம் . நாளைக்கு சனிப்பெயர்ச்சியாம்
வழக்கமாய் நான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் வலைப்பதிவில் update கொடுக்கவேண்டுமென நினைப்பதுண்டு. ஆனால் எல்லா நிகழ்வுகளிலும் ஒருங்கிணைக்கிறேன் பேர்வழி என்று நிகழ்ச்சிகளை கூட மிஸ் செய்யவேண்டியதாகிவிடும். இந்த முறையாவது …
அது வரைக்கும் இன்றைக்கு எடுத்த சில படங்கள் …
நிகழ்ச்சி நிரல்: ரொம்ப காலத்துக்கு அப்புறமா தமிழ்ல கையால எழுதினது
பட்டறைக்கான அறை – ச்சும்மா ஹைடெக்கா இருக்குதுல்ல





