(மு.கு:) தற்பெருமை பேசுறதுதான் நமக்கெல்லாம் fulltime job.. அதை ஒரு பதிவா போடுனு அன்பா யாராச்சும் கூப்பிட்டா வேணாம்னா சொல்லப்போறோம் !!!. Tagகிட்டதற்கு நன்றி பிரகாஷ்.
ஆட்டத்திற்கு முன்னாடி விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
இனி .. நம்ம பெருமை ஸ்டார்டிங் …
1. எனக்கே எங்கிட்ட பிடிச்ச விஷயம், என்னோட தன்னம்பிக்கை. Literalஆ சொல்லனும்னா, எவ்வளவு அடி வாங்கினாலும் உடனே அடுத்த கட்டத்துக்கு தயாராக்கிடற தன்னம்பிக்கை. முக்கியமா பள்ளி / கல்லூரி காலங்கள்ல என்னோட பெரும்பான்மையான கனவுகள் கனவாகவே போன பின்னாடியும் ரூம் போட்டு அழுததோட சரி…அடுத்த கட்டத்திற்கு ஒரு இலக்கை வைத்துக்கொண்டு பயணிக்க தொடங்கியிருக்கிறேன். மொத்தத்தில் சறுக்கும்போதெல்லாம் குதிரையாய் சட்டென எழும்பாவிட்டாலும், திக்கிதிணறியாவது எழுந்துவிடும் யானையாக இருப்பது.
2. முந்திரிக்கொட்டைத்தனமான அதேவேளையில் எதையும் முயற்சி செய்யும் ஆர்வம் …
(இரண்டாவது படிக்கும்போதே டியூசன்ல நான்காவது படித்துகொண்டிருந்த பையன் திணறிக்கொண்டிருந்த LCM, HCF கணக்கை solve பண்ணி கொடுத்த மாதிரி … இதை பார்த்த நம்ம டியூசன் வாத்தியார், என்னோட பெபசே, பெருமை பரப்பும் செயலாளர், வாகவே மாறிவிட அதற்கு அப்புறம் கொஞ்சநாள் வானத்தை இடித்து இடித்து , தலை வீங்கி போகுமளவுக்கு எகிறி குதித்துக்கொண்டிருந்தது தனிக்கதை)
3 . எட்டாவது படிக்கும்போதே ஒரு அரசியல் கட்சியின் மாநில மாநாட்டில் மேடையில் பேசும் தைரியமாய் வளர்ந்தது ….
(மாநாடு நடந்த மைதானமே ஹவுஸ்புல்லாக நம்ம பேச்சை கேட்க, வட்டம் மாவட்டம் என ஒவ்வொருத்தராய் மேடையில் வந்து பவ்யமாய் அமர எனக்கு பயங்கர குஷி. உணர்ச்சிவசத்தில் பராசக்தி சிவாஜியையெல்லாம் மிஞ்சும் வெறியோடு பேசிக்கொண்டிருந்தபோது சட்டென அதன் தலைவர் என்ட்ரி கொடுக்க மொத்த கூட்டமும் வாசல்பக்கம் திரும்ப, வட்டங்களும், மாவட்டங்களும் வாழ்க கோஷத்தை உச்சஸ்தயில் ஒலிக்கதொடங்க மேடையில் இருந்து அவ்வளவு மரியாதையாய் இறக்கப்பட்டது தனிக்கதை
)
4. தலையே போகிற பிரச்சனையாக இருந்தாலும் உள்ளுக்குள் எவ்வளவு நடுங்கினாலும் வெளியே கேசுவலாக காட்டிக்கொண்டு சமாளிக்க முயல்வது ..
இது கொஞ்சம் பெரிய கதை. கல்லூரியில் படித்தது மெக்கானிக்கல் இஞ்சினியரிங். பிரின்சிபலும் மெக்கானிக்கல் இஞ்சினியர். ஆனால் துரதிர்ஷ்டம் மனுஷனுக்கு மெக்கானிக்கல் பசங்களையே சுத்தமாய் பிடிக்காது. புழு பூச்சிகளை கூட மெக்கானிக்கல் பசங்களை விட அன்பாக பார்க்கிற ஜாதி. கல்லூரியின் symposium. எல்லா டிபார்ட்மெண்டுக்கும் சேர்ந்து நடக்கிற வைபவம். இறுதிநாளில் ஒவ்வொரு துறையிலிமிருந்தும் session summary வாசிக்கவேண்டும். எங்க டிபார்ட்மெண்டின் சார்பில் என்னை வாசிக்க சொல்லியிருந்தார்கள். டிபார்மெண்ட் வெற்றியாளர்களை நாங்கள் முடிவு செய்துகொண்டிருக்கும் போதே விழாவை தொடங்கிவிட்டார்கள். விஷயம் தெரிந்து அவசர அவசரமாய் formalsக்கு மாறுவதற்குள் என் பெயரை சொல்லி அழைத்துவிட்டார்கள். Tie கட்டாவிட்டால் மனுஷன் romantic look விடுவாரே என்ற பயத்தில் tieயை ஒரு கையால் கட்டிக்கொண்டே மேடைக்கு ஓடுவதற்குள் கோர்ட் டவாலி கணக்காய் compering பண்ணிய பட்சி மூன்றாவது முறையாக பேரை அழைத்துவிட்டது. ஒடிப்போய் மேடையில் ஏறி எல்லோரையும் விஷ் செய்தால் நம்ம ஆளு நெற்றிக்கண்ணில் சூரிய வெப்பம். ஹிஹித்துவிட்டு பேசவேண்டியதை குறித்து வைத்திருந்த பேப்பரை தேடினால் ஏற்கனவே உடுத்திய பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்துவிட்டது ஞாபகத்தில் வந்தது. எப்படியும் விழா முடிந்த பின்னாடி விக்கி பிரியாணி உறுதி என்றாலும் ஏதோ தைரியத்தில் தலைவர் பாணியில் பாதி வார்த்தையை முழுங்கி ஸ்டைலாக Good Evening friendsஓடு தொடங்கினேன். என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாமல்/புரியாமல் இரண்டு நாள் நான் பார்ததையெல்லாம் கேட்பவர்களுக்கு நிச்சயம் புரிந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கொஞ்சம் மடித்து கொஞ்சம் கடித்து பேசி முடித்து யார் கண்ணிலும் படாமல் வீட்டுக்கு ஓடிவிட்டேன். மறுநாள் Electrical dept HOD கூப்பிட்டு அனுப்ப, அத்தனை தெய்வங்களையும் வேண்டி கொண்டு போனால், மனிதர் புகழ்ந்து தள்ளிவிட்டார். மெக்கானிக்கல் கெத்தோடு (!!!) மேடைக்கு லேட்டாக வந்து அனாசயமாக good evening சொல்லி, hints கூட இல்லாமல் இரண்டு நாள் விஷயத்தையும் பேசி கலக்கிட்டய்யா என்று சொல்லி , princi கூட நேற்று விழா முடிந்த பின் பேசிக்கொண்டிருந்த போது உன்னை பாராட்டினார்யா என்றார். எந்த ஜென்மத்திலோ கர்ணனுக்கு நெக்ஸ்ட் டோரில் வசித்துகொண்டு குழாயடி சண்டை போடாமல் புண்ணியம்தான் இதற்கு காரணம் என்பது உறுதியாக தெரிந்தாலும் princi மட்டும் அதன்பின் பலமுறை classற்கு வந்த போதும் அந்த ரொமாண்டிக் லுக்கை மட்டும் ஏன் மாற்றவேயில்லை என்பது மட்டும் இன்று வரை மில்லியன்டாலர் கேள்வியாகவே இருந்துவருகிறது..
5. பிடிக்காத விஷயங்களை நேரிலேயே சொல்லிவிடுவது. இதனாலயே பல நண்பர்களை இழந்திருந்தாலும், கொஞ்ச பேருக்கு நம்பகமான நண்பனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
6. தெரியாத விஷயங்களை யாராயிருந்தாலும் தயக்கமில்லாமல் கேட்டு தெரிந்துகொள்வது.. அதேவேளையில் தெரிந்த விஷயங்களை சொல்லிக்கொடுப்பதிலும் தயக்கமில்லாதது. இதனாலயே study holidaysகளின் போது மினி வகுப்பறையாகவே எங்கள் வீடு மாறிவிடுவதுண்டு.
7. எனக்கு சரியென்று படும் விஷயங்களை முழுமையாக நம்புவது. அதனால் வரும் விளைவுகள் நமக்குமட்டும்தான் எனும்பட்சத்தில் சமாளிக்கலாம் என்று நம்புவது …
8. இல்லாத விஷயங்களை எல்லாம் இருப்பதாக எழுதி அதனை படிப்பவர்களையெல்லாம் நம்பவைத்துவிட்டதாக நினைத்துக்கொள்வது
யப்பா .. தற்பெருமை பேசுறதுதான் ஈஸியான job போல .. எட்டு பாயிண்டுகள் யோசித்து எழுதி முடிப்பதற்குள் வாயில் நுரை தள்ளிவிடுகிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக என்னும் நல்ல எண்ணத்தில் நான் அழைக்கும் எட்டு பேர்
1. மணியன்
2. மா. சிவக்குமார்
3. நிர்மல்
4. பொன்ஸ்
5. நாகை சிவா
6. நாமக்கல் சிபி
7. வெட்டி பாலாஜி
8. ரவிசங்கர்
