நல்லாயிருக்கவேண்டும் என்று விருப்பபடும் எந்த விஷயமும் உடனே பிடித்த விஷயமாக மாறிவிடுகிறது.
- ஏதோ ஜென் கதையிலோ ஜின் உள்ளே போன போதையிலோ சொல்லப்பட்டது.
சிவாஜி படத்தின் பாடல்களை இன்றிலிருந்து தைரியமாய் கேட்கலாம். சீடியின் விலை 100 ரூபாய். கேசட் 45 ரூபாய் என நினைக்கிறேன். சீடியோடு ரஜினியின் 3D ஸ்டிக்கர் ஒன்றை இலவசமாக தருகிறார்கள். அது சைனாவிலிலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டது என்கிறார்கள். அழகாக இருக்கிறது. வீட்டுக்காரர் கோபப்படாவிட்டால் ஜன்னலிலோ கதவிலோ, வீட்டிலுள்ளவர்கள் ஒரு மாதிரியாக பார்க்கமாட்டார்கள் என்றால் லேப்டாப்பிலோ ஒட்டலாம்
.
இனி பாடல்களை பற்றி ….
1. காவிரி ஆறும் கைகுத்தல் அரிசி (3.5/5)
அக்மார்க் ரஜினி அறிமுகப்பாடல். எஸ்.பி.பி வழக்கமாய் பின்னியிருக்கிறார். அதுவும் மூச்சு விடாமல் பாடியிருக்கும் பல்லவியின் போது தியேட்டர்கள் அதிரப்போவது நிச்சயம். வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பும் ரஜினி கிராமத்து வாழ்க்கையை பெருமையாய் பாடும் பாடல் இது என்பதை கண்டுபிடிக்க ஜமைக்காவின் மார்க் ஷீல்ட்ஸ் தேவையில்லை. சந்திரமுகியின் மாட்டுவண்டிக்கு பதில் இந்த முறை டிரக் வரும்போல தெரிகிறது. கலர்புல்லான அமர்க்களமான பாடலாக இருப்பதற்கான அத்தனை அறிகுறியும் இந்த பாடலில் தெரிகிறது. ரொம்ப நாளாகவே ரஜினியின் ஓபனிங் சாங்கை எழுதிவரும் வைரமுத்து மட்டும் மிஸ்ஸிங். நா.முத்துக்குமார் இந்தமுறை வாய்ப்பை பிடித்திருக்கிறார்.
2. ஒரு கூடை சன்லைட் (3.5/5)
பாடல்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் இணையத்தில் வெளிவந்தபோது நான் கேட்ட முதல் பாடல் இதுதான். இந்த பாடலை கேட்டவுடன் ஏற்பட்ட ஜெர்க் 7.3 ரிக்டெர் அளவுக்கிருந்தது. ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டால் கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது. பாடல்வரிகளை பத்து தடவைக்குள் கேட்டு சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் இலவசமாகவே கொடுப்பதாக தினகரன் பரிசுப்போட்டியே நடத்தலாம். ரஜினி hair bleaching செய்து கொண்டு ஸ்பெயினில் படு ஸ்டைலாக ஆடிய ஆட்டம் இந்த பாடலுக்காகத்தான் இருக்க வேண்டும்.
3. வாஜி வாஜி சிவாஜி (4.5/5)
ஹரிஹரனுடன் மதுஸ்ரீ பாடியிருக்கும் பாடல். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹரிஹரனின் ரசிக்கவைக்கும் மெலடி. நினைத்தாலே இனிக்கும்களில் நிச்சயம் இடம்பெறும் பாடல். ஆண்களில் உதித் நாரயணன் என்றால் பெண்களில் மதுஸ்ரீ. லகரம், ளகரம் சுட்டுபோட்டாலும் வரமாட்டேன்கிறது.வழக்கமாய் ரஜினி படத்தின் டூயட்களிலும் அரசியலை ஆங்காங்கே அள்ளித்தெளிப்பது வைரமுத்துவின் பழக்கம் (எந்த கட்சி காமன்/Common கட்சி - குலுவாலிலே, புயலுக்கு பூச்செண்டு கொடுப்பாய் – பாபா கிச்சு கிச்சு). இந்தப்பாடலில் வரும் “பெண்களிடம் சொல்வது குறைவு; செய்வது அதிகம்; செயல் புயல் நானடி” வரிகளுக்கு மட்டும் 1996ம் வருடமாயிருந்தால் ஆயிரம் அர்த்தங்களை சொல்லலாம்
.
நச்:
உன் பூவிழி பார்வைகள் போதுமடி ; என் பூங்கா இதழ்களும் உதிருமடிஇலைகளும் மலருமடி
உன் கால் கொலுசொலிகள் போதுமடி; பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
4. தீ தீ ஜெகஜ்ஜோதி … (3/5)
ரஜினிக்காக ரஹ்மான் நாலு படம் இசையமைத்துவிட்டாலும் ரஜினி படத்தில் பாடியிருக்கும் முதல் பாடல் இது. வாலி எழுதியிருக்கிறார். “பில்லா ரங்கா பாட்ஷாதான்; இவன் பிஸ்டல் பேசும் பேஸாதான்” தவிர வேறெந்த வரிகளும் வாலியை நினைவு படுத்தவில்லை. முதலிரவு பாடலாக வரும் போல இருக்கிறது. ரஹ்மான் ரசிகர்களுக்கு உடனே பிடித்துபோகும். மற்றபடி மெல்ல ஹிட்டாகும் வாய்ப்பிருக்கிறது.
5. சகானா சாரல் தூவுதோ .. (5/5)
Pick of the album. உதித்நாராயணன் சின்மயியுடன் இணைந்து பாடியிருக்கும் மெலடி இது. ரஹ்மான் மெலடி கலெக்ஷனின் இந்த பாடலுக்கு நிச்சயம் இடமுண்டு. உதித்துக்கு ஆங்காங்கே லகரம் உதைத்தாலும் கொஞ்சம் மெனக்கெட்டு பிழைகளை குறைத்திருக்கிறார். சின்மயியின் குரல் simply superb. கொஞ்ச நாளைக்கு முன்னர் மணிரத்னத்தின் குரு திரைப்படத்திலும் ரஹ்மானுடன் பாடிய Tera bina பாடல் one of the favourites ஆகிப்போனது. வைரமுத்து நிறைய இடங்களில் தனியாய் தெரிகிறார். சமீப காலங்களில் ஏ.ஆர் இசையமைத்த சிறந்த மெலடி இது என்றே சொல்வேன்.
நச்:
என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ …அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ…
அது என்னுடன் தேனீர் கொண்டதோ
6. சேகா ஃபைட்டா, சிவாஜி ரைட்டா (2.5/5)
படத்தின் தீம் மியூஸிக் இது. சமீபத்திய ரஜினி பட தீம் மியூஸிக்கை பொறுத்தளவில் தேவாவின் பாட்சா தீம் மியூஸிக்கை வேறெதுவும் மிஞ்சவில்லை. இந்தப்படத்திலும் அதே நிலை தொடர்கிறது. இன்னும் ரஹ்மான் சிறப்பான ஒரு தீம் முயற்சித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சச்சின் அடிச்சா சிக்ஸர்தான்டா, சிவாஜி அடிச்ச பஞ்சர்தான்டா; பாயும் வேகம் ஜெட்லிதான்டா, பஞ்ச் வைச்சா இட்லிதான்டா போன்ற வரிகள் நிச்சயம் வீராசாமியை நினைவுபடுத்துகிறது. என்னைக்கேட்டால் இந்தப்பாடல் சுமார் வகையறாதான்.
7. சகாரா பூக்கள் … (5/5)
சகானா சாரல் தூவுதே பாடலின் மற்றொரு (சோக) வடிவம் இது. விஜய் யேசுதாஸ் கோமதிஸ்ரீயுடன் பாடியிருக்கிறார். இருவரின் குரல்களும் கிறங்கடிக்கிறது. இரவு நேரங்களில் Sony walkmanல் repeat modeல் போட்டுவிட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதற்கு ஏற்ற பாடல் இது.
ரகுமான் முதல் பாடலை தவிர வேறெங்கும் ரஜினிக்காக அதிகமாய் compromise செய்யவில்லை. அதே வேளையில் அந்த இரண்டு fast beat பாடல்களை ரஜினிக்கு பொருத்துவது ஷங்கருக்கு பெரும் சவாலாகவே இருந்திருக்கும்.
மொத்தத்தில் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் நிறைவேற்றியதோடு நீண்ட நாள் ரசிக்கப்படும் பாடல்களையும் கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்
Verdict:
Sivaji – The Boss – 4 /5
மற்ற விமர்சனங்கள்:
Sivaji – Music Review
AR Rahman pleases Rajni fans with Sivaji
