யாகூவும் தமிழில் …

Archived in the category: இணையம், தமிழ்
Posted by Vicky on 03 Feb 07 - 0 Comments

யாகூ இந்தியா, இந்திய மொழிகளில் தனது சேவையை துவங்கியிருக்கிறது ( via: oosi ).  தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட ஏழு மொழிகளில் யாகூ தளத்தின் முகப்பு அமைந்திருக்கிறது.  யாகூ மெசஞ்சர்களிலும் தமிழில் சாட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே மைக்ரோசாஃப்டின் MSN India, தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தனது சேவையை தொடங்கியிருக்கிறது.  இப்போதைக்கு இந்த இரு  சேவைகளிலும் முகப்பு பக்கத்தில் மாநில மொழிகளில் செய்திகளும் அந்நிறுவனத்தில் மற்ற சேவைகளுக்கான சுட்டிகளும் அமைந்துள்ளன. அடுத்ததாக அனைத்து சேவைகளையும் மாநில மொழிகளில் தர முயற்சிகள் மேற்கொள்ளும் என நம்புகிறேன். இரண்டு சேவைகளும் unicode வசதியில் அமைந்திருக்கிறது.

இணையத்தை பொறுத்தளவில் மாநில மொழிகளுக்கென உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழில் அதிகரித்து வரும் தமிழ் வலைப்பதிவுகளை இதற்கு சாட்சி. ஆனாலும் தமிழை பொறுத்தளவில் செய்திகளுக்காக இணையத்தள சேவைகள் அதிகம் இல்லை. அவ்வாறு இருக்கும் சேவைகளும் 90களின் இணையப்பக்கங்களின் வசதியை கொண்டே அமைந்திருக்கிறது. யாகூ, மைக்ரோசாஃப்ட் போன்ற பெருந்தலைகள் களத்திலிறங்கியிருப்பது தரத்தையும் போட்டியையும் அதிகரிக்கும்.

பெரிய நிறுவனங்கள் மாநில மொழிகளுக்கு வருவதில் இன்னொரு மிகப்பெரிய advantageம் இருக்கிறது. மாநில மொழிகளில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு மிகமுக்கிய காரணமாய் நான் கருதுவது, மாநில மொழி தளங்களின் மூலம் வருவாய் ஈட்டும் வழி இல்லாததுதான். Google உள்ளிட்ட adsense முறைகள் இன்னும் தமிழ் வலைத்தளங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இப்போது அவர்களே மாநில மொழிகளுக்கு வருவதால் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்ட அவர்களே வழிவகைகளை உருவாக்குவார்கள்.

என்னைப்பொறுத்தளவில் இணையத்தில் தமிழை பொறுத்தவரை முக்கிய இடத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இது காலத்தில் கட்டாயமும் கூட :)

இணையத்தில் தமிழ் குறித்து நான் முன்னர் எழுதிய இடுகைகள்:

இணையத்தில் தமிழ் ஊடகங்கள்

தமிழில் கூகுள் ஆட்சென்ஸ்??

தமிழ் வலைப்பதிவுகளில் Google Ads

Laeave a Reply