அவுட்லுக் வார இதழ் 2006ல் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டு அதிகமாக விற்பனையான புத்தகங்களை பட்டியலிட்டிருக்கிறது.

1. In the Line of Fire – A Memoir : Pervez Musharraf
2.The Inheritance of Loss – A Novel : Kiran Desai
3. Trees of Delhi—A Field Guide : Pradip Krishen
4. Home : Manju Kapur
5. A Call To Honour—In Service of Emergent India : Jaswant Singh
6. The Last Mughal—The Fall of a Dynasty. Delhi. 1857 : William Dalrymple
7. Identity and Violence—The Illusion of Destiny : Amartya Sen
8. Sacred Games : Vikram Chandra
9. Ayodhya-6 December 1992 : P V Narasimha Rao

இவற்றுள் In the Line of Fire – Pervez Musharaf, A Call to Honour – Jaswanth Singh, The Last Moghal – William Dalrymple , Identity and Violence – Amarthya Sen & Ayodhya- P V Narasimha Rao ஆகிய ஐந்து புத்தகங்களையும் நிச்சயம் படிக்கவேண்டும் என்று விரும்பினேன்…. ஆனால் வழக்கமாய் 200 best-seller-2006.jpgரூபாய் கொடுத்து முதலிரண்டு நாட்களுக்குள் சினிமா பார்க்க தயங்காத மனசு 500 – 600 ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்குவதற்கு ஆயிரத்தி ரெண்டாவது முறையாக யோசிக்கிறது. தெரிந்தவர்கள் யாரிடமாவதோ, libraryயிலோ இருந்தால் ஓசி வாங்கிக்கொள்ளலாம் என்ற நப்பாசையில் Credit Cardஐ LandMarkல் தேய்க்காமலே காத்திருக்க சொல்கிறது. இந்த வருட சென்னை புத்தக கண்காட்சிக்குள் யாரும் சிக்காவிட்டால் நிச்சயம் மேலே சொன்ன ஐந்தில் இரண்டு புத்தகங்களையாவது வாங்கிவிட வேண்டும் என இப்போதைக்கு ஒரு மனதாக முடிவு செய்திருக்கிறேன்.

தமிழ் புத்தகங்களை பொறுத்தளவில் பழைய புத்தகங்களிலேயே இன்னும் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்றாலும் 2006ல் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது, அதில் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ள ஆசையாயிருக்கிறது. இந்த பதிவை வாசிக்கும் நண்பர்களில் யாராவது 2006 தமிழ் புத்தகங்கள் குறித்த அலசலோ அல்லது பட்டியலோ வெளியிட்டால் தேவலை. அடுத்த மாதம் புத்தக கண்காட்சி வரவிருக்கும் சூழலில் நிச்சயம் இந்தத் தகவல் நிறைய பேருக்கு உபயோகமாய் இருக்கும்.

2 comments for “நினைத்தேன் எழுதுகிறேன் – 15: Best sellers of 2006”

2

__/\__ பாலா.

Thts a very interesting and Exhaustive list :)

January 3rd, 2007 at 10:49 pm

Laeave a Reply