
காலையில் ஒரு தமிழ் வலைத்தளத்தை மேய்ந்தபோது கூகுள் ஆட்சென்ஸில் தமிழ் விளம்பரம் கண்ணில் பட்டது. ஆங்கிலத்தை தவிர்த்த மற்ற பிராந்திய மொழிகளிலும் கூகுள் ஆட்சென்ஸை விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே ஹிந்தி மொழி சார்ந்த விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழில் சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். தமிழில் விளம்பரங்கள் குறித்த அறிவிப்புக்களை இதுவரை நான் பார்க்கவில்லை.
தமிழில் கூகுள் ஆட்சென்ஸ் அறிமுகப்படுத்தப்படுவது வலைத்தளங்களும் வலைப்பக்கங்களும் மேம்பட பெரிதும் உதவும். தமிழில் இணையத்தளங்களின் மூலமும் வலைப்பதிவுகளின் மூலமும் வருவாய் ஈட்ட இதுவரை வழி இல்லாமல் இருந்து வந்தது. கூகுள் ஆட்சென்ஸ் முறை தமிழில் அறிமுகப்படுத்தும்போது தமிழ் தளங்களுக்கும் வருவாய் ஈட்ட வழிபிறக்கும். ஆனால் தமிழ்/தமிழர்கள் சார்ந்த வணிக நிறுவனங்களில் பல இன்னும் இணையதள ஜெனரேஷனுக்கு மாறாததால் உடனடியாக ஆயிரக்கணக்கான டாலர்களை எதிர்பார்க்க முடியாது.
மற்றபடி இப்போதே தமிழ் வலைப்பதிவாளர்களில் பலர் தங்கள் வலைப்பக்கங்களில் கூகுள் ஆட்சென்ஸை நிறுவியிருக்கிறார்கள். ஆனால் ஆட்சென்ஸ் விதிமுறைகளின் அனுமதிக்கப்படாத மொழிகளைத்தவிர மற்ற மொழிகளின் தளங்களில் நிறுவப்பட்டிருக்கும் ஆட்சென்ஸ் முறை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என கூகுள் ஆட்சென்ஸ் தளத்தில் படித்ததாக ஞாபகம். தமிழ்மணத்தில் கூட சில காலம் கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரங்கள் தலைகாட்டியிருந்தது. அதனால் யாராவது அந்த 100$ கோட்டை தாண்டி சம்பாதித்தார்களா என தெரிந்து கொள்ள ஆசை. 
பி.கு: இந்தப்படத்திலிருக்கும் கூகுள் ஆட்சென்ஸில் தமிழ கல்யாணம் என்றிருக்கிறது. இப்போதைக்கு பிழைத்து போகிறார்கள். தொடர்ந்து இதேபோல தவறுவந்தால் பிழையில்லாமல் விளம்பரங்களை வெளியிட்டால் வரிவிலக்குகள் என அறிவித்து வழிக்கு கொண்டு வந்து விடலாம்
முந்தைய பதிவு:
