Download செய்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தெலுங்கு வாடை அதிகமாய் அடித்ததால் 'Something Something எனக்கும் உனக்கும்' படத்தின் பாடல்களை கேட்கமாலிருந்தேன். நேற்று த்ரிஷாவுக்காக இல்லாமல், பாடலில் வரும் Background நன்றாக இருக்கிறதே என பாடலை கவனித்து பார்த்தால் நா.முத்துக்குமார் தூள் கிளப்பியிருந்தார். சும்மாவே பெண்களை வருணிப்பது என்றால் நம் கவிஞர்களுக்கு அல்வா சாப்பிடறது மாதிரி. கண்ணதாசனில் தொடங்கி வைரமுத்துவரை, நிலவு ஒரு பெண்ணாகியில் தொடங்கி தாவணி போட்ட தீபாவளி வரை நம்ம கவிஞர்களின் கற்பனைக்குதிரையை அடங்காமல் ஓடியது. இப்போது த்ரிஷாவை வர்ணிக்க வேண்டும் என்றால் கேட்கவா வேண்டும். ரசிக்கும்படியாகவே வர்ணித்திருக்கிறார். ஆனால் மின்னலை பிடித்து மேகத்தை குழைத்து பிரம்மன் செய்த சிற்பம் ஒன்று Second Heroineஆக த்ரிஷாவுக்கு பக்கத்தில் டம்மியாய் … பார்க்க பாவமாயிருக்கிறது :(  

Something.jpg

 

பூப்பறிக்க நீயும் போகாதே; உன்னைப் பார்த்தாலே பூக்களுக்குள் கத்திச் சண்டையடி பொட்டு வைக்க நீயும் போகாதே; உன்னைப் பாத்தாலே கண்ணாடி கைகள் நீட்டுமடி
கோவிலுக்கு நீயும் போகாதே; கோபுரங்கள் சாஞ்சி பார்க்குமடி
காட்டுக்குள்ள நீயும் போகாதே; கொட்டுகிற தேனீக்கூட்டம் தேனெடுக்க, உதட்ட சுற்றுமடி. 

எனத்தொடங்கும் பாடலில் என்னை மிகவும் கவர்ந்த சில வரிகள்  

ஆத்துக்குள்ள நீ குளிச்சா அங்க உள்ள மீனு எல்லாம் மீசையைத்தான் சுத்திகிட்டு அலையுதடி
ஆட்டுக்குட்டி கூட தாடி ஒண்ணு வச்சுக்கிட்டு ஒரு தலை காதலுடன் திரியுதடி!!!
…………………….
கால் முளைச்ச சூரியனா, தூள் கிளப்பி சுத்துறியே!!! உன்னிடத்தில் எந்த நிலா, ஒளி பெறுமோ ??
வட்டமிடும் பட்டாம்பூச்சியே, உன் வண்ணமெல்லாம் ஒட்டிக்கொள்ள பூவும் பூத்திருக்கு !!!

ரொம்ப நாளைக்கு அப்புறமா சங்கர் மகாதேவன் கேட்கிற மாதிரி ஒரு பாடல் பாடியிருக்கார். அதுக்கு நிச்சயமா Spl Thanks :) .

3 comments for “பூப்பறிக்க நீயும் போகாதே – சிறப்பு “பார்வை””

1

மிகவும் நல்ல பாடல். கபிலன் வரிகளில்,”உன் பார்வையில்..” பாடலும் மிக நன்றாக வந்திருக்கிறது.
கேட்டீர்கள்தானே?

August 12th, 2006 at 1:27 pm
2
CT

“த்ரிஷாவுக்காக இல்லாமல்” -Difficult to believe ,but reading the rest of the blog I trust you buddy.

August 12th, 2006 at 10:31 pm
3

@siva,

// கபிலன் வரிகளில்,”உன் பார்வையில்..” பாடலும் மிக நன்றாக வந்திருக்கிறது.

நீங்கள் கூறிய பின்னர்தான் பாடல்வரிகளை உன்னிப்பாய் கவனித்தேன். சிறப்பான வரிகள். குறிப்பாய் ..

பெண் தோழன் நான்; ஆண் தோழி நீ, நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆண் ஆசை நான்; பெண் ஆசை நீ, ஆசைகள் பேராசை தான்

@CT,

// “த்ரிஷாவுக்காக இல்லாமல்” -Difficult to believe

யாருமே நம்பமாட்டேன்கிறாங்கப்பா ;)

// but reading the rest of the blog I trust you buddy.

Thanks Buddy :)

August 16th, 2006 at 4:15 pm

Laeave a Reply