அச்சுப்பத்திரிக்கைகளின் இணைய வடிவம் வலைப்பதிவென்றால், ரேடியோ/டிவிக்களின் இணைய வடிவமாக பாட்காஸ்டிங்கை சொல்கிறார்கள். 2010ம் ஆண்டிற்குள் இணையத்தில் 12 மில்லியன் பாட்காஸ்டுகள் இருக்கும் என்கிறார்கள். இரண்டு பக்கங்களில் எழுதியும் சொல்லமுடியாததை 2 1/2 நிமிட பாட்காஸ்டிங்கில் சொல்லமுடிவதும், மொழியை (குறிப்பாய் ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழிகள்) வாசிப்பதை சிரமமாய் உணர்பவர்கள் ஆனால் பேசுவதை கேட்டால்/பார்த்தால் புரிந்து கொள்ளும் தனித்தன்மை கொண்டவர்களின் சதவீகிதம் அதிகரித்து வருவதாலும் பாட்காஸ்டிங்கின் பயன்பாடு அதிகரிக்கும் என்கிறார்கள்.
சென்னை டைடல் பார்க்கில் வரும் சனி, [...]


